
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் தோல்வி குறித்த கேள்வி சந்தானத்திடம் எழுப்பப்பட்டது. அதற்கு சந்தானம், “அப்படத்தின் கதையை படித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போதே, இப்படம் ஃப்ளாப் என்று ராஜேஷ் சாரிடம் கூறினேன்.
கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரத்தின் மீது நாயகி சந்தேகப்படுகிறார், வில்லனும் அதன் மீது ஆசைப்படுகிறார் என்பதுதான் படத்தின் மெயின் சப்ஜெக்ட். ஆகையால் அந்தக் கதாபாத்திரத்துக்கு ‘அவ்வை சண்முகி’ மாதிரி மேக்கப் அளவுக்கு மெனக்கெடல் வேண்டும் என்றேன். ரசிகர்கள் பார்க்கும்போது ஏதோ ஒரு மெனக்கெடல் இருக்கிறது என தோன்ற வேண்டும்.