
கோபால்பூர்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு ‘பர்கவஸ்த்ரா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (எஸ்டிஏஎல்) என்ற உள்நாட்டு நிறுவனம் குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டுகளை உருவாக்கியது. இது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டுகள் கோபால்பூரில் நேற்று முன்தினம் 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ராணுவத்தின் வான்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.