
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
அப்போது சிம்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன போதே, இது சூப்பர் ஹிட் ஆகும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்றேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். ரசிகர்களின் ஆதரவுதான் அதற்கு காரணம். சசிகுமார் மிக அற்புதமான மனிதர். சிறந்த இயக்குநர். அருமையான ‘கோ ஸ்டார்’. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.