
கீர்த்தி சுரேஷ், தமிழில் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதில் ராஜ்குமார் ராவ், ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். “இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை நையாண்டியாகப் பேசும் படமாக இது உருவாகிறது. இரண்டு கல்வியாளர்களின் பார்வையில் அறிவை விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிக மயமானது என்பதையும் இந்தப் படம் சொல்லும்” என்கிறது படக்குழு.