
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அது 1917 ம் ஆண்டு
தாத்தாவும் பெரிய அத்தையும் ரங்கோனில் ஜவுளி வியாபாரம்.. பெரிய அத்தையை சமையலுக்கு தாத்தா கூட கூட்டி கொண்டு சென்றார்..
சேலத்தில் சொந்த ஜவுளி தயாரிப்புக்களை தாத்தா மொத்தமாக சென்னையிலிருந்து கப்பலில் கொண்டு போய் வியாபாரம் செய்து வந்தார் .. 6 மாதங்களுக்கு ஒரு முறை சென்னையிலிருந்து கப்பலில் ரங்கோனுக்கு சரக்குகள் போய் கொண்டிருக்கும்.. தாத்தா 3 வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து புதிய ஜவுளி ரகங்களை தயார் செய்வார்.
ரங்கோன் பூகம்பம் வரும் வரை எல்லாம் சரியாக இருந்தது. பூகம்பத்தால் ஒரே இரவில் எல்லாம் கேள்வி குறியாகி விட்டது.. போட்டதை போட்டபடி போட்டுவிட்டு ஊருக்கு திரும்புமாறு பூகம்பம் செய்து விட்டது.. வெளியே வரவு செலவில் ஏராளமான பணம் வர வேண்டியிருந்தது .. யாரை எங்கே போய் கேட்பது உயிருடன் ஊருக்கு திரும்பினாலே போதும்.
புதிய தொழிலை செய்து பிழைத்துக் கொள்ளலாம்.. ஊரில் பெரிய வீடும் நில புலன்களும் இருந்தது.. 500 கிராம் வரை தங்கம் இருந்தது. ஆனால் உயிருடன் சென்றால் தானே இவையெல்லாம் தங்கம் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை வெறும் மண்தான்..
இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு கிளம்பிவிட வேண்டும்.. ரங்கோன் அடுத்த பூகம்பத்தை எதிர்பார்த்து இருந்தது. கால்நடையாகவோ அல்லது பழைய ராணுவ ஜீப்களிலோ அசாம் வரை சென்றுவிட்டால் பிரச்னையில்லை.
கடையின் இடிபாடுகிடையில் பாதி ஜவுளிகளை மீட்டு வைத்திருந்தார் தாத்தா.. கடையின் பின்புறம் குடியிருந்த வீடும் பாதி இடிந்துவிட்டது அத்தையும் இடிபாடுகளுக்கிடையில் தப்பித்து இருந்தது ஆச்சரியம்தான்..
பாதி ஜவுளிகளை வந்த விலைக்கு விற்று விட்டால் கிளம்பி விடலாம். நெருங்கிய நண்பர் ஒருவர் உதவிக்கு வந்தார் பாதி விலையில் அவர் ஜவுளிகளை எடுத்துக் கொண்டார் அதுவே பேருதவியாக இருந்தது. அதற்கு மாற்றாக அவரும் இந்திய ரூபாயை தர ஒப்புக் கொண்டார்..

ரங்கோன் பணம் நிறைய கையிலிருந்து அதை நண்பர் இந்திய ரூபாயாக மாற்றி தந்தது பேருதவியாக இருந்து. ரங்கோன் பணம் சில ஆயிரத்தை கையில் வைத்துக் கொண்டார் கல்கத்தா வரை அது செல்லுபடியாகும் பெரிய தொகை பணம் வெளியே நின்றது ஆனால் யாரையும் காணவில்லை எல்லோரும் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.
எல்லோருக்கும் வாழ்கையே கேள்விக்குறியாக இருந்தது கடைவீதியில் தாத்தாவின் கடைதான் பெரியகடை. கல்ராம செட்டி என்றால் ரங்கோன் கடைவீதியில் தெரியாதவர்கள் யாருமில்லை.. ஆனால் ஏதோ மிஞ்சியதை எடுத்துக் கொண்டு சொந்த ஊர் கிளம்ப முடிவு செய்திருந்தார் தாத்தா..
அசாமிலும் கல்கத்தாவிலும் ஜவுளி துறை நண்பர்கள் இருந்தனர். அங்கே இளைப்பாறி ரயிலில் கூட ஊர் போய் சேர்ந்துவிட முடியும்.. ஆனால் திருடர்களிடம் இருந்து தப்பித்து கல்கத்தா வரை செல்ல வேண்டும்..
இனி ரங்கோனுக்கு வருவதில்லை என தாத்தா முடிவு செய்திருந்தார்.. ஜவுளி தொழிலை மாற்றி சோப்பு தொழிலில் ஈடுபட முடிவும் செய்திருந்தார். ரங்கோனிலே வெள்ளையர்களின் பிரதான சோப்பான குட்டிகுரோ சோப்புக்கு இணையாக சோப் தயாரிக்கும் முறையை கற்றறிந்து இருந்தார். அதனாலேயே பூகம்ப பாதிப்பை கூட அவர் பெரிதாக எண்ணவில்லை. மேனிக்கு போடும் சோப்பிற்கு மவுசு வந்துக் கொண்டிருந்த காலமது..

rangoonஅடுத்தநாள் சொந்த ஊருக்கு போவதாக முடிவுச் செய்திருந்தார். நண்பர்களில் பலர் மரணமடைந்து இருந்தனர். இருந்தவர்களை கண்டு விடைப் பெற்றிருந்தார்.. தானும் மகளும் உயிருடன் இருந்த விந்தையை எண்ணி வியந்தார்.
அத்தையும் பதினைந்து நாளுக்கு வரும்படி புளி சாதம் செய்திருந்தார். இது அசாம் வரை பிரயாணம் தடைபடாமல் இருந்தால் சரியாக இருக்கும்..
அடுத்தநாள் கால் நடையாகவே தாத்தாவும் அத்தையும் கிளம்பி விட்டனர்.. 30 கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஒரு சிறிய நகரிலிருந்து அசாம் வரை பழைய ராணுவ ஜீப்பில் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஜீப்காரர்கள் ரங்கோன் வர பயப்பட்டனர்.
அதற்க்கு 15 ஆயிரம் ரூபாய் பேசி ரங்கோனிலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது.. கூட ஒரு ஆளும் ஜீப்பில் ஏற்றிவிட வந்திருந்தார். அது மிக சவுகரியமாக இருந்தது.
தாத்தாவும் அத்தையும் ஊர் திரும்பிய பிறகு குடும்பத்தினருடன் உட்கார்ந்து இந்த கதைகளை சொல்லி மாய்ந்தனர் தாத்தாவும் அத்தையும் ஊர் திரும்பிய தை பக்கத்து கரடிலிருந்த முருக பெருமானுக்கு ஊர் திரும்பியதை கொண்டாடும் பொருட்டு விழா எடுத்திருந்தார்.
சொந்தங்களும் ஊர்காரர்களும் கலந்து கொண்டு வீட்டில் ஒரு வாரம் வரை விருந்து நடந்தது இதையெல்லாம் எங்கள் சின்ன பாட்டி அடிக்கடி சொல்லி எங்கள் நினைவலைகளை மீட்டினார்..

அசாமிற்கு செல்லும் ஜீப்பில் ஈரோட்டை சார்ந்த ஜவுளித்துறை நண்பர்களும் வந்திருந்தது தாத்தாவுக்கும் அத்தைக்கும் மிகுந்த ஆறுதலாக இருந்தது அவர்களுடன் சேலம் வரை வழிநெடுக வந்து சேர நான்கு மாதமாகிவிட்டது..அசாம் செல்லும் ஜீப்பில் ஏற கால்நடையாகவே பாரம் தூக்கும் கோவேரி களுதைகளுடன் போய் சேர நான்கு நாட்கள் ஆகிவிட்டதால்.ஒரு வழியாக அசாமிற்கு ஜீப்பில் சென்று சேர ஒரு மாதமாகி விட்டதாம்..
அந்த மலை நகரத்திலிருந்து இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் 6 ஜீப்புகளில் ஒன்றாகவே பயணப்பட்டது மிகவும் பாதுகாப்பாக இருந்ததாம் வழியில் இரண்டு முறை திருடர் கூட்டங்கள் வழி மறிக்க ஒன்றாக இருந்து ஆண்கள் தடிகளுடன் இறங்க பயந்து ஓடி விட்டனராம்..
வழி நெடுக பூகம்ப பாதிப்பிலிருந்து திரும்பியவர்களுக்கு அண்ணசாலைகளையும் சில மலை கிராமத்தினர் திறந்து வைத்து தங்கி செல்லவும் ஏற்பாடு செய்திருந்தனராம்.. ஒருவழியாக அசாம் சென்றடைந்து நண்பரின் வீட்டில் நான்கு நாட்கள் அசதி தீர தங்கினார்களாம். ஈரோடு குடும்பத்தினரும் ஒரு மண்டபதில் பாதுகாப்பாக தங்கி மீண்டனர்..

கல்கத்தாவிற்கு செல்ல அசாம் நண்பரே ஈரோடு குடும்பத்தினரையும் சேர்த்து 25000 வாடகையில் ஏற்பாடு செய்திருந்தனர். பணமிருந்தபடியால் கல்கத்தாவிற்கு எளிதாக பத்து நாட்களில் சென்றடைய முடிந்தது. பலர் கால்நடையாகவே கூட்டம் கூட்டமாய் சென்றுக் கொண்டிருந்தனர்..
கல்கத்தா சென்று சொந்தகாரரின் வீட்டில் அத்தையுடன் நான்கு நாட்கள் தங்கினார். தாத்தா ஈரோடு குடும்பத்தினரும் கூடவே தங்க அது விசாலமான வீடாக இருந்தது. நான்கு நாட்கள் சொந்தகாரர் இன் வீட்டில் விருந்து உபசாரத்துடன் தாத்தா தங்கி மீண்டார்..
கல்கத்தாவில் இருந்து ஹதாராபாத் செல்லும் ரயிலை கூட்ட நெரிசலால் வெள்ளை அரசாங்கம் கேன்சல் செய்து விட்டது. பலர் ரயிலில் மேல்பகுதியில் பயணம் செய்ய விபத்தும் பலர் கூட்ட நெரிசலால் இறந்து விட்டதும் ரயிலை கேன்சல் செய்ய காரணமாம்..
கல்கத்தாவில் இருந்து ஒரு மாட்டு வண்டியை 10ஆயிரம் ரூபாயிக்கு பேசி ஒரு மாதத்தில் ஹதாராபாத் சென்றடைந்தனர்.
ஹதாராபாத்திலிருந்து சென்னைக்கு ரயில் இருந்தது கூட்ட நெரிசல் இருந்தாலும் உட்கார இடம் கிடைத்ததாம். ஒரு வழியாக சென்னை சென்றடைந்து கொச்சின் வரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்து அத்தையுடன் சேலம் சென்றடைந்தார் தாத்தா.. ஈரோடு குடும்பத்தினரிடமிருந்து விடை பெற்றார் தாத்தா.
சேலம் ரயில் நிலையத்திற்கு வில் வண்டியுடன் காத்திருந்தார் கணக்கு பிள்ளை மூர்த்தி அய்யர்.. ஒரு வழியாக அய்யம்புதூர் சென்றடைந்தார் தாத்தா..வீட்டினரும் சொந்தபந்ங்களும் ஊராகும் கூடி வரவேற்றனர்..தாத்தாவும் அத்தையும் மகிழ்சியில் திளைத்தனர் என்று சொல்லவும் வேண்டுமா!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.