
புதுடெல்லி: பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.