• May 14, 2025
  • NewsEditor
  • 0

அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து ஆண்​டு​களுக்கு முன்​பு, ஒன்​று​பட்ட நாமக்​கல் மாவட்ட திமுக செய​லா​ள​ராக முன்​னாள் மத்​திய இணை​யமைச்​சர் செ.​காந்​திச்​செல்​வன் தான் இருந்​தார். ஸ்டா​லினின் தீவிர விசு​வாசி​யான இவர் மீது அதிருப்தி ஏற்​பட்​ட​தாலோ என்​னவோ 10 ஆண்​டு​களுக்கு முன்பு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டார். அதன்​பிறகு நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக காந்​திச்​செல்​வன் அறிவிக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *