• May 14, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார் மருத்துவர். குடும்ப பின்னணியில் டயாபட்டீஸ் இல்லாதபோதும் சிலருக்கு இப்படி கர்ப்ப காலத்தில் அந்த பாதிப்பு வர என்ன காரணம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவை ‘ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்’ (gestational diabetes ) என்கிறோம்.  வழக்கமாக இது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதங்களில் வரும். 

கர்ப்பகால நீரிழிவுக்கு முக்கிய காரணமே, கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரிப்பதுதான். உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ (BMI) அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கர்ப்பிணிக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பகால நீரிழிவு வந்தால் அது தானாக சரியாகிவிடும் என்ற அலட்சியம் வேண்டாம். மற்ற கர்ப்பிணிகளைவிடவும் இவர்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

குழந்தையின் உடல் எடையும் அதிகரிக்கலாம். குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும்.

குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் நீரிழிவு பாதிப்பதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் உண்டு.  அதாவது எல்லாப் பெண்களுக்கும் பிரசவமானதும் அந்தத் தற்காலிக நீரிழிவு சரியாகிவிடுவதில்லை. சிலருக்கு அது நிரந்தரமாகவும் மாறலாம். எனவே,  கர்ப்பகால நீரிழிவு என்பதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அவர்கள் வருடந்தோறும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

பிரசவமானதும் நீரிழிவு சரியானதாக நினைத்துக்கொண்டு அலட்சியமாக இல்லாமல், உடல் எடையைச் சரியாக வைத்துக்கொள்வது, சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் அப்போதிலிருந்தே அக்கறை செலுத்த வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *