
பிரபல நடிகர் ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தான் நடிக்கும் படங்களில் டூப் போடாமல் ஒரிஜினலாக ஆக்‌ஷன் காட்சிகளில் பங்கேற்பது இவர் வழக்கம்.
1980-மற்றும் 90-களில் இவர் நடித்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இவரின் ‘ட்ரங்கன் மாஸ்டர்’ (1978), ‘போலீஸ் ஸ்டோரி’ (1985), ‘ரஷ் ஹவர்’ (1998)உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடின. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹாலிவுட் சண்டைக் காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால், உண்மைத் தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.