
சென்னை: “உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.