
மகாராஷ்டிரா நாட்டின் பணக்கார மாநிலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி குறித்து 16வது நிதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மாநிலத்தில் அதிகமான பகுதிகள் மிகவும் பின்தங்கி இருப்பதாக நிதி கமிஷன் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, புனே, கோலாப்பூர், ராய்கட், சிந்துதுர்க், நாக்பூர் ஆகிய மாவட்டத்தில் மட்டுமே வளர்ச்சி விகிதம் 54 சதவீதமாக இருக்கிறது.
மாநிலத்தின் சராசரி தனி நபர் வருமானம் ரூ.2.8 லட்சமாக இருந்தாலும், இது 27 மாநிலங்களின் சராசரி வருமானத்தை விடக் குறைவாகவே இருக்கிறது.
யவத்மால், கட்சிரோலி, புல்தானா, வாசிம், ஹின்கோலி, நந்துர்பர் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் மிகவும் பின் தங்கி இருக்கிறது.
வளர்ச்சியில் மகாராஷ்டிரா மும்பையைப் பெரிதும் நம்பி இருக்கிறது. மும்பையை உள்ளடக்கிய கொங்கன் மண்டலம் மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் 39 சதவீத பங்கு வகிக்கிறது.
இதையடுத்து பின் தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சியை அதிகரிக்க மாநில அரசு 5 ஆண்டுத் திட்டம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் 53 சதவீத தொழிலாளர்கள் விவசாயத்துறையில் இருக்கின்றனர். ஆனால் விவசாயத் துறை மாநில வளர்ச்சியில் 13 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது.
அதோடு மாநிலத்தில் 75 சதவீத விவசாய நிலத்தில் மழைக் காலத்தில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.
மேலும் மகாராஷ்டிராவில் அதிகப்படியான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். ஆனால் நகர கட்டமைப்பை மேம்படுத்த போதிய நிதி இல்லாமல் இருக்கிறது.

அதேசமயம் மகாராஷ்டிராவில் வருவாய் பற்றாக்குறை 45 ஆயிரம் கோடியைத் தாண்டி இருக்கிறது. எனவே மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சிறப்பு நிதியாக ரூ.1.3 லட்சம் கோடி கொடுக்கவேண்டும் என்று நிதி கமிஷனிடம் மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவிற்குக் கொடுக்கும் வரி பங்களிப்பை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY