
புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.