
சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் சரந்தீப் சிங் பேசியிருக்கிறார்.
“சில வாரங்களுக்கு முன்பு நான் விராட் கோலியிடம் பேசினேன், இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்காகக் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இல்லை நான் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தியா ஏ போட்டிகளில் விளையாடபோகிறேன். 2018-ல் நான் செய்ததைப் போல, வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4-5 சதங்களை அடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
அதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரைப் பார்ப்போம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அவருடைய ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

அவர் இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களில் ஒருவர். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகவும் கடினமானது. அவர் இல்லாமல் அங்கு சென்றால் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…