• May 12, 2025
  • NewsEditor
  • 0

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு! பதிவு செய்யுங்கள்! 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

ராவணேஸ்வரன் ஒருநாளில் நூறு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்தைக் கண்டபிறகே உணவு எடுத்துக் கொள்வான் என்றும் அதற்காகவே அவன் புஷ்பக விமானத்தை உருவாக்கினான் என்றும் புராணத் தகவல் ஒன்று உண்டு. ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்பது ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்துக்கு ஒப்பானது என்பர். இந்த ஆலயத்தில் இறைவன் மேகநாதேஸ்வரராய் மிக அழகாக கம்பீரமாக சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

குளிர்ந்த தேகம் கொண்ட வர்ணனுக்கு கடுமையான வெப்புநோய் சாபத்தால் உண்டானது. இதனால் உடலெங்கும் வெப்பம் பெருகிய வருணன், அதனால் இங்கு வந்து ஈசனுக்கு ஆலயமும் தீர்த்தமும் உண்டாக்கி வழிபட்டான் என்கிறது இந்த ஆலய தலவரலாறு. பிறகு ராமாயண காலத்தில் ராவணனின் மகனான மேகநாதன் இங்கு வந்து மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் செய்து ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டி நின்றான். எனினும் இறுதியில் அதர்மத்தின் வழி நின்ற மேகநாதனை தர்மம் வீழ்த்தியது. தர்மத்தோடு வாழ்பவர் எவராகினும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள ஆயுளும் காரிய வெற்றியும் கிடைக்கும் என்பது நிச்சயம்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

இந்த மேலக்கோட்டையூர் சிவாலயம் ராஜராஜ சோழரின் ஆட்சி காலத்தில் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு சிறப்பாக விளங்கியது என்பதை இங்குள்ள கல்வெட்டும் தெரிவிக்கிறது. இங்குள்ள ஈசனின் வாசுகி நர்த்தனர் திருக்கோலம் வேறெங்கும் காண முடியாதது எனலாம். அம்பிகை அழகே வடிவாக நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய வரமும், பலமும் கிட்டும் என்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த மேகநாதர் ஆலயத்தில் மாதம்தோறும் அமாவாசை நாளில் மஹாமிருத்யுஞ்சய ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. மார்க்கண்டேயரால் உருவாக்கப்பட்ட மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை முறையாக ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், காரிய வெற்றி யாவும் கிடைக்கும் என்பது உறுதி. 12 ராசிக்கும் தனித்தனியாக சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜைகளும் நடைபெறும் என்பதும் சிறப்பு. மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். மரண பயத்தை ஒழிக்கும் சக்தி இந்த ஹோமத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த மகிமை நிறைந்த தலத்தில் வரும் 26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

QR CODE FOR MAHAMIRUTHYUNJAYA HOMAM:

qr code for miruthyunjaya homam

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *