
சென்னை: தமிழகம் 897 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஏற்றுமதி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த மகத்தான பணிகள் பாராட்டப்பட்டன.