
விழுப்புரத்தில் நடந்த ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் திருநங்கை’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார்.