
புதுடெல்லி: பிஹாரின் பக்ஸர் மாவட்டம் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த சிப்பாயான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். அவர் தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர் தொடங்கி விட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று திருமணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் தியாகி யாதவ்.