
உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது லக்னோ, கான்பூர், அலிகர், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய 6 முக்கிய முனைகளைக் கொண்டுள்ளது.