
மதுரை: 90 சதவீத நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரையில் வலியுறுத்தினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 22ல் காஷ்மீர் பஹல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றிருப்பது தெரிகிறது. மும்பை தாக்குதலிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் மகாராஷ்டிராவில் பயிற்சி பெற்றுள்ளனர்.