
லக்னோ: "இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்பாடு குறித்த கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள்" என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற போது யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.