• May 11, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என இந்திய விமான படை எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operation Sindoor

இது குறித்த பதிவில், “இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளது. ராணுவ ஒழுங்குடனும் துல்லியமாகவும் பணியாற்றியுள்ளோம் (precision and professionalism).” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், “நாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப, திட்டமிட்டு விவேகமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

(ராணுவ) நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதனால் விரிவான விளக்கங்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படும். யாரும் யூகங்களையும் சரிபார்க்கப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என ராணுவம் கேட்டுக்கொள்கிறது” என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் சம்பவத்துக்கு எதிர்வினையாக, மே 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது ஆபரேஷன் சிந்தூர்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை, இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்தியிருந்தாலும் பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) முழுமையாக முடிவடையும் வரை இந்திய விமானப்படை எச்சரிக்கையாகவே இருக்கும் என சி.என்.பி.சி.டி.வி செய்தி தள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *