
‘ஒரு நொடி’ படக்குழுவினரின் அடுத்த படமான ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் தொடங்கினார்கள். இதன் படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஹாரர் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த தலைப்பை மாலை 6 மணி, 6 நிமிடங்கள், 6 நொடிக்கு வெளியிட்டார்கள். இப்படம் குறித்து இயக்குநர் பி.மணிவர்மன், “முந்தைய ‘ஜென்ம நட்சத்திரம்’ போன்றே இந்தப் படமும் பேசும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பு அதன் நிஜ ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம்.