
பாகிஸ்தான் படைகள், இந்திய எல்லையில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. தற்போது இந்திய முப்படைகள் மட்டுமல்லாமல் துணை ராணுவமும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான டெர்ரிடோரியல் ஆர்மி 32 பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. இந்த டெர்ரிடோரியல் ஆர்மி துணை ராணுவத்தின் 14 பட்டாலியன்கள் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.