
இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான 'ஆகாஷ்தீர்', பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் பரஸ்பரம் அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் ட்ரோன், ஏவுகணைகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.
லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படை தளங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இவை அனைத்தும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.