• May 10, 2025
  • NewsEditor
  • 0

‘ஓய்வு பெறும் கோலி?’

டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும் அதை பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Virat Kohli

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில்தான் விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மறுபரிசீலனை செய்யுங்கள்?

ரோஹித் சர்மா இந்தக் கட்டத்தில் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு செல்வார் என்பது பலரும் எதிர்பார்த்ததே.

Virat Kohli
Virat Kohli

ஆனால், விராட் கோலிக்கு இருக்கும் உடற்தகுதிக்கு அவர் கட்டாயம் 2027 வரை ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. பிசிசிஐயும் கோலியின் முடிவில் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இணைந்தே ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமயத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிப்பது உண்மையாக இருந்தால், அதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *