
புதுடெல்லி: எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது.
அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து அழித்தனர்.