
26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.
இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாகப் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்ட எனக் கூறியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதனால் இந்தியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு, மருத்துவம் தொடர்பான பணியாளர்கள் விடுப்பின்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனச் சில வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இதனைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL), “இந்தியா முழுவதும் எங்கள் எரிபொருள் பங்குகள் போதுமான அளவில் உள்ளன. எங்கள் விநியோக பாதைகள் முற்றிலும் சீராக இயங்கி வருகின்றன.
அச்சத்தின் அடிப்படையிலான பெருமளவு வாங்கும் செயல்கள் தேவையில்லை. எரிபொருளும் எல்பிஜியும் எங்கள் அனைத்து அவுட்லெட்டுகளிலும் எளிதில் கிடைக்கின்றன” என்று அறிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs