
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தாக்குதலையடுத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்காக நிவாரண முகாம்கள் ஜம்மு மற்றும் சம்பலில் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அந்த முகாம்களை பார்வையிட சென்ற ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அங்கிருந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதையடுத்து சம்பா முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்ற உமர் அப்துல்லா அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் அவரும் இணைந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.