பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் மேற்கு மாகணமான பலுசிஸ்தானில் மூன்று கிளர்ச்சியாளர் குழுக்கள், குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

பலுசிஸ்தான் படைகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்களுடன் ‘சுதந்திர பலுசிஸ்தான்’ என்ற கோஷமும் அதிகரித்து வருகிறது.

பலுசிஸ்தான் கொடி

சில இடங்களில் பாகிஸ்தான் கொடியை இறக்கி பலுசிஸ்தான் கொடியை ஏற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

Pakistan ராணுவ தலங்களில் தாக்குதல்!

பலுசிஸ்தான் முழுவதுமுள்ள பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் பலூச் சுதந்திர கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதில் தீவிரம் காட்டிவரும் சூழலிலும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தொடந்து முன்னேறியுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரு நாளுக்குள் 4 முறை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலை எதிர்கொண்டனர்.

குவெட்டா முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக செய்திகள் வெளியாக்கியுள்ளன. இதிலிருந்து பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் தீவிரத்தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

பரபரப்பை ஏற்படுத்திய பலுசிஸ்தான் கவிஞர்

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருந்துவரும் பாகிஸ்தான் இன்று காலை, உலக வங்கி மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அதிக கடன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கில்ஜில் பலுசிஸ்தான்

நேற்றையதினம் பலுசிஸ்தான் எழுத்தாளர் மிர் யார் பலோச், “பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் கொடிகளை விடுத்து, பலுசிஸ்தான் கொடிகளை ஏந்தத் தொடங்கிவிட்டனர். உலக நாடுகள் தங்கள் தூதரகங்களை பாகிஸ்தானில் இருந்து அகற்றி புதிய நாடான பலுசிஸ்தானில் நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது.” எனப் பதிவிட்டது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *