
வேல்ஸ் குழுமத்தின் சேர்மேன் ஐசரி.கே.கணேஷின் மகளான ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.
வேல்ஸ் குழுவத்தின் சேர்மனாக வேல்ஸ் கல்லூரி, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றையும் கவனித்து வருகிறார் ஐசரி.கே.கணேஷ்.
ப்ரீத்தா கணேஷ் வேல்ஸ் குழுமத்தின் துணை செயல் தலைவராகவும் இருக்கிறார்.
இவருக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கு இன்று திருவான்மியூரிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. லஷ்வின் குமார் ஒரு அர்கிடெட்.
குவிந்த பிரபலங்கள்..!
இவர்களின் திருமணம் இன்று பிரமாண்டமான முறையில் நடந்திருக்கிறது. சினிமா துறையிலிருந்து பலரும் இவர்களின் திருமணத்தில் இன்று பங்கேற்றிருக்கிறார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், நிழல்கள் ரவி, இயக்குநர்கள் மணி ரத்னம், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பி.வாசு, நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் இந்த திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

அரசியல் பக்கமிருந்து அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தம்பதிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருந்த சங்கீத் விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்றிருந்தார்.
இந்த தம்பதிக்கும் நாளைய தினம் சென்னையில் ரிஷப்ஷன் நடைபெற்றவுள்ளது. அதற்காக பிரமாண்ட செட்களையும் அமைத்து வருகிறார்களாம்.