
சென்னை: சிவகங்கை அருகே கூலித்தொழிலாளி பெண்ணின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி குமார் – முத்துக்கருப்பி. கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்துள்ளார்.