
திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, அதை செய்தோம். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இரவில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பதிலடியை மட்டுமே கொடுத்தோம். இப்போது, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு நமது படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால், அதை அதிகரிக்க நாம் விரும்பவில்லை.