
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.