
பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’.
இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘அம்பி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மே 7) சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய ரோபோ சங்கர், “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. இரண்டு வருடம் மஞ்சள் காமாலை நோயால் மிகவும் அவதிப்பட்டேன்.
அந்தச் சமயத்தில் 10 நிமிடம் வெயிலில் இருக்க முடியாது. சரியான நேரத்திற்கு நான் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வரைக்கும் அந்த மருந்தை நான் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
கிட்டத்தட்ட 3 வருடம் அந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பத்திய சாப்பாடுதான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
எங்குப் படப்பிடிப்பிற்குச் சென்றாலும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன்.

என்னைக் கரம் பிடித்ததிலிருந்து இப்போது வரை என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வது என் மனைவிதான். ரோபோ சங்கர் அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது என்று சினிமா வட்டாரத்தில் பலரும் சொல்வதை என் காது படவே கேட்டிருக்கிறேன்.
ஆனால் மீண்டும் என்னைக் களம் இறக்கிய எனது மனைவிக்கும், மகளுக்கும் நன்றி” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…