
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகி இருக்கிறது.
காலை 9 மணிக்குச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு முடிவில் மாணவிகள் 96.70 சதவிகிதத் தேர்ச்சியும், மாணவர்கள் 93.16 சதவிகித தேர்ச்சியும் பெற்றிருக்கின்றனர்.
இந்தத் தேர்வு நேரத்தில் பல்வேறு துயர சம்பங்களும் நடந்தன. பெற்றோர் இறந்த நிலையிலும் சில மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதச் சென்றனர்.
அந்த வகையில் வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவன் சுனில் குமார் 375 எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவர் முகேஷ். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்த இவர் கடந்த ஏப். 8ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
இன்று வெளியாகி இருக்கும் தேர்வு முடிவில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த சம்பவம் பலரது மனதையும் நொறுங்கச் செய்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…