
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா (17).
பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த இவர் தேர்வு எழுதி விட்டு அதன் ரிசல்டுக்காக காத்திருந்தார்.
தோழிகளிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும், “நான் சரியாகத் தேர்வு எழுதவில்லை. முடிவு என்ன ஆக போகுதோ பாஸா, பெயிலா என்ன நடக்கப்போகுதுனு தெரியவில்லை” என்று சோகத்துடன் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் ஆர்த்திகாவைக் காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் பின்புறத்தில் சற்று தள்ளியுள்ள மாட்டுக்கொட்டகையில் பார்த்த போது ஆர்த்திகா, தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கியுள்ளார்.
இதைப் பார்த்துப் பெற்றோர் கதறியுள்ளனர். இது குறித்து பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இன்று +2 ரிசல்ட் வெளியாவதையொட்டி, தேர்வில் பெயில் ஆகிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியானது. இதில் தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திகா 413 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதை உறவினர்கள் ஆர்த்திகாவின் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் அழுது புலம்பியிருக்கின்றனர்.

ஆர்த்திகா தேர்ச்சி பெற்றது அப்பகுதி முழுவதும் பரவியது. ஓரளவுக்கு நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகியிருக்கிறார்.
ஆனால் அதற்குள் அவசரப்பட்டு தப்பான முடிவை எடுத்து விட்டதாக வருத்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs