கடந்த ஏப்ரல் 2-ம் தேதியை, ‘அமெரிக்காவின் விடுதலை நாள்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் ‘மே 8’-ம் தேதியை ‘வெற்றி நாள்’ என்று அறிவித்து அறிவிப்பு ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

‘வெற்றி நாள்’ குறித்து ட்ரம்ப் கூறியதாவது…

“மே 8-ம் தேதியை இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆணையில் கையெழுத்திட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது இரண்டாம் உலகப் போரின் நினைவாக அறிவிக்கப்பட்டது ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள இரண்டாம் உலகப்போரின் அமெரிக்கக் கூட்டாளிகள் இந்த வாரத்தை கொண்டாடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர்

ஆனால், அமெரிக்கா இந்தக் கொண்டாட்டத்தில் இதுவரை இணைந்ததில்லை. ஆனால், அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும்பாலும் அமெரிக்காவால் தான் சாத்தியப்பட்டது.

நாம் அந்தத் தினத்தை கொண்டாடாமல் போவது இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்காக உயிர் நீத்தவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். அதனால், அந்தத் தினத்தை கொண்டாடப்போகிறோம்.

80 ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் டாங்க், கப்பல், டிரக், விமானம், வீரர்கள் தான் எதிரிகளை அழித்தார்கள். அமெரிக்கா இல்லாமல், இந்த விடுதலை கிடைத்திருக்காது. அதனால், அந்த வெற்றியை வாங்கித் தந்த மக்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.

இந்தப் போரினால் பல நாடுகள் சிதைந்து போயிருந்தன. அதைச் சரி செய்ய நாம் உதவினோம். ஆனால், இதுகுறித்து யாரும் பேசுவதில்லை.

இந்த நாள் குறித்து அனைத்து அமெரிக்கர்களும் பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் இனிய வெற்றி நாள். இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வெற்றி நாளைக் கொண்டாடுவோம்.

இனி நமக்கு முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என இரு வெற்றி நாள்கள் இருக்கப் போகின்றன.

அமெரிக்கா
அமெரிக்கா

எதிர்காலத்தில், இந்த நாள்களைப் பெரிதாகக் கொண்டாடுவோம். இந்த நாளில் விடுமுறை எல்லாம் கிடையாது. ஏற்கெனவே ஒரு ஆண்டில் தேவையான நாள்கள் நம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு நமக்கு நிறைய கொண்டாட்டங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு நமக்கு முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என இரு வெற்றி நாள்கள் இருக்கப் போகின்றன.

நாம் இல்லாமல், இரண்டாம் உலகப் போரில் வெற்றி சாத்தியமாகியிருக்காது. அதற்கான பெருமையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *