
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரிந்துவிடும்.
தேர்வு முடிவு தெரிந்த பின்பும், ‘என்ன படிக்கலாம்?’, ‘எந்தக் கல்லூரியில் சேரலாம்?’, ‘எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?’, ‘அதற்கு கல்விக் கட்டணம் எவ்வளவு?’, ‘அதற்கான உதவித்தொகையை எப்படி பெறலாம்?’ என்கிற கேள்விகள் இருந்தால், கவலையே பட வேண்டாம்.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தரவும், உயர்கல்வி சம்பந்தமான பிற ஆலோசனைகளை பெறவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு தகவல் மைய எண்ணை அறிவித்துள்ளது.
அது 14417.
இந்த எண்ணிற்கு அழைத்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு, தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
அதுப்போல, மதிப்பெண் குறைந்துவிட்டது என்றெல்லாம் ஃபீல் செய்யாமல், அந்த மதிப்பெண்ணிற்கு என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் இதே எண்ணில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று ஒரு தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது என்று அதை மட்டுமே அனைவரும் தேர்ந்தெடுக்காமல், எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பம் பெரிதாக வளரும் என்பதை கணக்கிட்டு தேர்ந்தெடுத்து படியுங்கள் மாணவர்களே.
ஆல் தி பெஸ்ட்!