
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா காங்கிரஸை சேர்ந்த ரோ கண்ணாவிடம் கேள்வி எழப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு ரோ கண்ணா, “இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இப்போதைய அவசர தேவை பதற்ற நிலையை குறைப்பது ஆகும்.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதர்கு இந்தியா சில தீவிரவாத முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது.
இரு நாடுகள் பல ஆண்டுகளாக சண்டை போட்டுகொள்வதற்கு ஒரே காரணம் தான். அது பிரிட்டிஷ் காலனி இரு நாடுகளுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கியது… இந்து, முஸ்லீம்களிடம் பிரிவினையை உருவாக்கியது.
இரு பிரதேசங்களையும் நன்கு புரிந்து, பதற்றத்தை குறைக்கும் நல்ல நடுநிலையாளர் வேண்டும்.
நாம் அசிம் முனீர் ஒரு சர்வாதிகாரி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர் சட்டரீதியான எந்தத் தேர்தலையும் நடத்தவில்லை. இம்ரான் கானை சிறையில் அடைத்திpருக்கிறார். இப்போது பாகிஸ்தானில் எந்த நியாயமான குரலும் ஒலிப்பதில்லை. காரணம், சர்வாதிகாரம். பதற்ற நிலை குறைப்பிற்கு பிறகு, அங்கே நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும். பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப் கடன் கொடுக்கிறது. அதை அவர்கள் நம்பி இருக்கிறார்கள். அசிம் முனீரிடம் இம்ரான் கானை விடுவிக்க சொல்ல வேண்டும். பதிலடியை நிறுத்த சொல்ல வேண்டும். மேலும், அங்கே நியாயமான தேர்தல் வேண்டும்” என்று பதிலளித்தார்.
யார் இந்த ரோ கண்ணா?
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இவரது பெற்றோர் பஞ்சாப்பில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவரது தாய் வழி தாத்தா அமர்நாத் வித்யாலங்கார் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
ரோ கண்ணா தற்போது அமெரிக்கா காங்கிரஸில் உறுப்பினராக இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.