
நிழற்குடை (தமிழ்)
சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மனி, நீலிமா ராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிழற்குடை’. குடும்பத்தில் வேலையில் பிஸியாக இருக்கும் பெற்றோரால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இந்த வாரம் மே 9-ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
கலியுகம் (தமிழ்)

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இனியன், ‘ஆடுகளம்’ கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலியுகம்’. இன்னும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உலகில் நீர், உணவு, மனிதம் ஏதுமில்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதுதான் இதன் கதைக்களம். 2064ம் ஆண்டில் நடக்கும் சயின்ஸ் பிக்ஸன் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
கஜானா (தமிழ்)

பிரபதீஷ் இயக்கத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஜானா’. அட்வண்டர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
என் காதலே (ஆங்கிலம்)

ஜெயலக்ஷிமி இயக்கத்தில் கபாலி லிங்கேஷ், காட்பாடி ராஜன், திவ்யா தாமஸ், மதுசூதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என் காதலே’. வெளிநாட்டுப் பெண், சொந்த ஊர் பெண் இருவரின் காதலில் சிக்கித் தவிக்கும் கடல் பகுதியைச் சேர்ந்த இளைஞனின் முக்கோணக் காதல் கதையான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
அம்பி (தமிழ்)

போஸர் ஜே எல்வின் இயக்கத்தில் ரோபோ ஷங்கர், அஷ்வினி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அம்பி. காமெடி, கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Sarkeet (மலையாளம்)
தமர் கே வி இயக்கத்தில் ஆசிஃப் அலி, திவ்ய பிரபா, தீபக் பரம்போல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sarkeet’. வேலை, மன அழுத்தம் இதற்கிடையில் தந்தையாகத் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் வரும் சிக்கல்கள் என தந்தையின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Prince and Family (மலையாளம்)

பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ஶ்ரீனிவாசன், ஜானி ஆண்டனி, மஞ்சு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Prince and Family’. காமெடிகள் நிறைந்த சுவாரஸ்யமான குடும்பத் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Padakkalam (மலையாளம்)

மனு ஸ்வராஜ் இயக்கத்தில் ஷரஃவுதின், சுராஜ், சந்தீப், நிரஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Padakkalam’. தாயக் கட்டை விளையாட்டி வைத்து உருவாகியிருக்கும் சஸ்பன்ஸ், திரில்லர், அமானுஷ்யங்கள் நிறைந்த திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Subham (தெலுங்கு)
பிரவீன் இயக்கத்தில் ஹர்ஷித், ஶ்ரீனிவாஸ், சரண் பெரி, ஷ்ரேயா, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Subham’. காமெடி, ஹாரர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Bhool Chuk Maaf (இந்தி)
கரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வமிஃவா கஃபி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhool Chuk Maaf’. காமெடி, ரொமாண்டிக் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Shadow Force (ஆங்கிலம்)
ஜோ கார்னகன் இயக்கத்தில் மார்க் ஸ்ட்ராங், கெர்ரி வாஷிங்டன், டா வைன் ஜாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shadow Force’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.