
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், “டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அடுத்தபடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.