
‘திடீர் ஓய்வு!’
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென அறிவித்திருக்கிறார்.
‘ரோஹித்தின் பதிவு!’
இதுசம்பந்தமாக ரோஹித் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘எல்லோருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் எனும் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்திய அணியை வெள்ளை உடையில் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பெருமைக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்திய அணிக்காக தொடர்ந்து ஓடிஐ போட்டிகளில் ஆடுவேன் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.’ என ரோஹித் கூறியிருக்கிறார்.

ரோஹித் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ் ஆகியிருந்தது. ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்தே ரோஹித்தின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ரோஹித் சர்மாவின் திடீர் ஓய்வைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.