
‘பென்ஸ்’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதில் லாரன்ஸ் உடன் நடிக்க நிவின் பாலி, மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட படம் ‘பென்ஸ்’. இதனை பாக்யராஜ் கண்ணன் இயக்கவுளார். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது. ‘கூலி’ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக இருந்ததால், ‘பென்ஸ்’ படப்பிடிப்பு தாமதமானது.
தற்போது விரைவில் ‘பென்ஸ்’ படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதில் நாயகனாக லாரன்ஸ் நடிக்கவுள்ளார். அவருடன் நிவின் பாலி மற்றும் மாதவன் நடிக்கவுள்ளார்கள். இப்படமும் எல்.சி.யூ படங்களில் இணைகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.