ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ நடத்தியுள்ளது இந்தியா.

இந்த ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.

இந்த ஒன்பது இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இருந்திருக்கின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் :

ஏன் இந்த ஒன்பது இடங்கள்?

இந்த ஒன்பது இடங்களும் கடந்த காலங்களில் இந்தியா மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்புடையது மற்றும் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் உள்நுழைய அதிகம் முயற்சிக்கும் இடங்கள் ஆகும்.

இதை வைத்து இந்திய ராணுவம் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களை பற்றி…

பஹவல்பூர்: இது பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஆகும். இது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவர் மசூத் அசார்.

2001-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்கள் இந்த அமைப்பினால் தான் நடத்தப்பட்டது.

முரிட்கே: லாகூர் அருகில் இருக்கும் முரிட்கே லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முகாமாகும். இந்த இடத்தில் தீவிரவாத பயிற்சி கூடம், ஆயுதக் கூடம், ஆயுத போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.

2008 மும்பை தாக்குதலுக்கும், இந்த அமைப்பிற்கும் சம்பந்தம் உள்ளது என்று இந்திய அரசால் கூறப்படுகிறது.

மெஹ்மூனா: இது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இடம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த அமைப்பு எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை தான். ஆனால், தீவிரவாதப் பயிற்சிகள் இங்கே நடந்துகொண்டே தான் இருக்கிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

கோட்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது கோட்லி. இங்கே தற்கொலை படையினர், கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றனர். கோட்லியில் எந்த நேரத்திலும் 50 பேருக்கு பயிற்சிகள் வழங்க முடியும் என்று தகவல்கள் கூறுகின்றது.

குல்பூர், சவாய், சர்ஜால், பர்னாலா ஆகிய இடங்களும் இந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இடங்களிலும் தீவிரவாதப் பயிற்சி, தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு போன்றவை நடைபெற்று வந்தது தான் இதற்கான காரணம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *