ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவுபடுத்தும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் முக்கிய மஸ்ஜித்தான இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித்தில், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டின் போது மதகுரு ஆற்றும் உரை ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியின் மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் காசி மக்களை நோக்கி, “இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் ஈடுபட்டால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரிப்பீர்கள்?” எனக் கேட்கிறார். கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தியதாக தெரியவில்லை. உடனே மதகுரு இமாம் பேசத்தொடங்குகிறார்.

இங்கிருந்து பார்க்கும்போது ஒன்று இரண்டு கரங்கள் மட்டும் உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் பலர் அறிவொளி பெற்றுள்ளனர் எனத் தெரிகிறது. பாகிஸ்தானின் போராட்டம் இஸ்லாத்தின் போராட்டமல்ல, அதிகாரத்துக்கானப் போர். இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக ஒடுக்குமுறை நிலவுகிறது. மதச்சார்பற்ற பாகிஸ்தானியர்களை அச்சுறுத்தலாகக் கருதுகிறது இந்த அரசு.” எனப் பேசுகிறார்.

ஏற்கெனவே அரசுக்கு எதிராக மதகுருமார்கள் செயல்படுகிறார்கள் என்றக் குற்றச்சாட்டு அதிகரித்திருக்கும் நிலையில், வெளிப்படையாக அரசை விமர்சித்திருக்கும் பிரபல மசூதியின் இமானின் வீடியோ பேசுபொருளாகியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *