நடப்பு ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை முழுமையாக இழந்து ‘E’ மார்க் வாங்கி எலிமினேட் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் எந்த அணியும் அந்த ‘Q’ மார்க்கை வாங்கி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறவில்லை.

IPL cup

வழக்கமாக, 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளை பெறும் அணிகளும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடும். இந்த முறை அப்படியும் இல்லை. பெங்களூரு அணி 16 புள்ளிகளை வென்றுவிட்டது.

RCB
RCB

ஆனாலும் ‘Q’ மார்க்கை வாங்கவில்லை. ஆக, இந்த வருடம் போட்டி கடுமையாகியிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸ் சுவாரஸ்யமடைந்திருக்கிறது. இப்போதைய சூழலில் அணிகளின் நிலைமை என்ன? எந்தெந்த அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற வாய்ப்பிருக்கிறது.

ப்ளே ஆப்ஸ் வாய்ப்புள்ள 7 அணிகளையும் அப்படியே வரிசையாக பார்த்துவிடுவோம். இப்போதைக்கு பெங்களூரு அணிதான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் ஆடி 8 போட்டிகளில் வென்றிருக்கிறது. இன்னும் 3 போட்டிகள் எஞ்சியிருக்கிறது. வழக்கமாக இந்த 16 புள்ளிகளே ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற போதுமானதாக இருக்கும்.

RCB Team
RCB Team

இந்த முறை போட்டி வலுவாக இருப்பதால் பெங்களூரு இன்னும் ஒரு போட்டியை வென்றால்தான் சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்கு செல்ல முடியும். லக்னோ, சன்ரைசர்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகளை ஆர்சிபி எதிர்கொள்ளவிருக்கிறது. ஆர்சிபி நல்ல பார்மில் இருப்பதால் இந்த மூன்றில் ஒரு போட்டியை வெல்வது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்காது.

அவர்கள் இரண்டில் வென்று முதல் இரண்டு இடத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எப்படியும் ப்ளே ஆப்ஸூக்குள் வந்துவிடுவார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 7 இல் வென்றிருக்கிறார்கள். ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக, 15 புள்ளிகளில் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட 17 புள்ளிகளுக்கு சென்றுவிடுவார்கள். அப்போது தகுதியும் பெற்றுவிடுவார்கள்.

Punjab Kings
Punjab Kings

டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகளை பஞ்சாப் எதிர்கொள்ள வேண்டும். இதில், பஞ்சாப் இருக்கிற பார்முக்கு ராஜஸ்தானை வென்று விடுவார்கள் என்பதே இப்போதைய கணிப்பு. அந்த வெற்றியே அவர்களை ப்ளே ஆப்ஸூக்கு அழைத்துச் செல்ல போதுமானதுதான்.

இப்போதைக்கு மூன்றாவது இடத்தில் மும்பை இருக்கிறது. 11 போட்டிகளில் 7 இல் வென்றிருக்கிறார்கள். 14 புள்ளிகளில் இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக இன்னும் ஒரு போட்டியையாவது வென்றுவிட வேண்டும் எனும் சூழல். ஆனால், மும்பைக்கு பெரிய சவாலே காத்திருக்கிறது.

Mumbai Indians
Mumbai Indians

ஏனெனில், மும்பை அணி எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் குஜராத், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்த 3 அணிகளுமே ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருக்கின்றன. வலுவான அணிகள், அதனால் போட்டியுமே கடுமையாக இருக்கும். மும்பை அணி பெரும் சவாலை எதிர்கொண்டு வெல்ல வேண்டியிருக்கும்.

இப்போதைக்கு நான்காவது இடத்தில் குஜராத் இருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருக்கும் மற்ற அணிகளோடு ஒரு போட்டியில் குறைவாகவே ஆடியிருக்கிறார்கள். 10 போட்டிகளில் மட்டுமே ஆடி 7 இல் வென்றிருக்கிறார்கள். மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை ஆகிய அணிகளை இன்னும் எதிர்கொள்ள வேண்டும்.

Gujarat Titans
Gujarat Titans

இந்த நான்கில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டியிருக்கும். குஜராத் இருக்கும் பார்முக்கு லனோவையும் சென்னையையும் எளிதில் அடிக்க முடியும் என்பதால் குஜராத் ப்ளே ஆப்ஸூக்குள் வந்துவிடும் என்பதே இப்போதைய கணிப்பு.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 11 போட்டிகளில் ஆடி 6 இல் வென்றிருக்கிறது. 13 புள்ளிகளோடு இருக்கிறது. இன்னும் 2 போட்டிகளையாவது வென்றாக வேண்டும். ஆனால், மும்பையை போலவே இவர்களுக்கும் சவால் காத்திருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.

Axar Patel
Axar Patel

மூன்றுமே வலுவான அணிகள். டெல்லி கேப்பிட்டல்ஸ் சுமாரான பார்மில் இருக்கிறது. ஆக, அவர்களின் ப்ளே ஆப்ஸ் ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது.

ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் இருக்கின்றன. இருவரும் தலா 11 போட்டிகளில் ஆடியிருக்கின்றனர். மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு புள்ளியை வென்று கொல்கத்தா 11 புள்ளிகளிலும் லக்னோ 10 புள்ளிகளோடும் இருக்கிறது.

Lucknow Super Giants
Lucknow Super Giants

இருவருமே எஞ்சியிருக்கும் 3 போட்டிகளையுமே வெல்ல வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக 2 போட்டிகளையாவது வெல்ல வேண்டும் எனும் சூழலே இருக்கும். லக்னோவின் தற்போதைய பார்முக்கு அது எட்டாக் கனியாகத்தான் தெரிகிறது.

Kolkata Knight Riders
Kolkata Knight Riders

‘ஏறக்குறைய உறுதியான அணிகள்!’

பெங்களூரு ஏற்கனவே 16 புள்ளிகளை பெற்றுவிட்டது. இன்னும் அந்த Q மார்க் மட்டுமே கிடைக்க வேண்டும். பஞ்சாப் 15 புள்ளிகளில் இருக்கிறது. மூன்று போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட போதும். அதேமாதிரி, குஜராத் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. ஒன்றில் வென்றால் கூட 16 புள்ளிகளுக்கு வந்துவிடுவார்கள். ஆக, இந்த மூன்று அணிகளும் எப்படியோ ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடக் கூடும். இன்னும் ஒரே ஒரு இடம்தான் மீதமிருக்கிறது. அதற்குதான் மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் முட்டி மோதப் போகின்றன.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *