
விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழியாக வாகனங்களில் தொண்டர்கள் சென்றபோது, கலவரம் வெடித்தது. பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள், வாகனங்கள் மற்றும் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாமக மற்றும் விசிகவினர் மீது பல வழக்குகள் பதிவாகின.