
இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னராக திகழும் விராட் கோலி டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று பார்மட் கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலியின் பள்ளிப் பருவம் குறித்து அவரது ஆசிரியை விபா சச்தேவ் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.” விராட் கோலி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மிகவும் ஆர்வமாகப் பங்கேற்பார். கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்பார்.
மேம் இந்திய அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் நான்தான் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சிறுவனின் தன்னம்பிக்கையும் மன உறுதியும் பார்த்தபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. விராட் கோலி எப்போதுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய ஒரு மாணவர்தான்.

ஒரு சில தேர்வுகளில் அவரது மதிப்பெண்கள் குறையும். அந்த சமயங்களில் பயிற்சிகளை மேற்கொண்டதால்தான் சரியாகத் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்பார். விளையாட்டிலும், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விராட் கடுமையாக உழைத்தார்” என்று ஆசிரியர் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…