பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து படுகொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

நயினார் நாகேந்திரன்

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு பகுதியில் பெரும்பாலான மக்கள் தங்களின் தோட்டத்தில் வசிப்பார்கள். திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில் அவர்கள் அச்சம் இல்லாமல் இருந்தனர்.

கொலை
கொலை

தற்போது தோட்டத்தை காலி செய்துவிட்டு வெளியூர் செல்கின்றனர்.  பல்லடம் பகுதியில் கஞ்சா போதையால் 7 கொலைகள் நடந்ததுள்ளன. தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான்!

நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது வேறு எங்காவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் இருக்கிறது. கொங்கு பகுதியில், கோடை விடுமுறைக்கு தோட்டத்துக்கு வந்த குழந்தைகள் உள்பட அனைவரும் திரும்பி செல்கிறார்கள். மதப் பிரச்னைகள் குறித்து நாங்கள் பேசவில்லை.

முதலமைச்சர்

நாங்கள் முதலமைச்சரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்குவதற்காக மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான். இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் ஓட்டுகளும் பாஜகவுக்கு வரும். எனக்கும் வந்துள்ளது.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *