
சென்னை: “தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக இழைத்த துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு முடிவே கிடைக்காது. ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசுக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் சரித்திரமிக்க சாதனையை படைப்பார்கள் என்பது உறுதி,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “செய்யக் கூடாதவற்றை செய்தாலும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருந்தாலும் கேடு ஏற்படும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு திமுக அரசின் நான்காண்டு மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சி மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.